fbpx
Homeபிற செய்திகள்திருச்சுழியில் விவசாய நீர்ப்பாசன திட்டப் பணி- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு

திருச்சுழியில் விவசாய நீர்ப்பாசன திட்டப் பணி- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளன. இதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பண்ணை உற்பத்தி

பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு தார் பாலின் வழங்கினார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணி களையும், ரூ.5 லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பல் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ.1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், முத்துராமலிங்கபுர ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டுதல் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்,

காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பில் நடைª பற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும், புல்ல நாயக்கன்பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைத்தல் பணிகளையும், பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணி களையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டுவரும் சமுதாயக்கூடம் விரிவாக்க பணிக ளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையத்தில் கர்ப்பிணிக ளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பொது மக்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சௌ மியன், உதவி பொறியாளர் இராஜகோபால், உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் நீர்வடிப் பகுதி உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img