fbpx
Homeபிற செய்திகள்வரி வசூலில் வடக்கு மண்டலம் முதலிடம் - மேயர் பெருமிதம்

வரி வசூலில் வடக்கு மண்டலம் முதலிடம் – மேயர் பெருமிதம்

கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலம் மன்ற கூட்டம் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்.


கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியில் 94.86 சதவீதம் பெற்று வடக்கு மண்டலம் முதலிடம் பெற்றது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 4 வது வார்டு 99 சதவீதம் வரிவசூலில் முதலிடம் பெற்றது. இதை தொடர்ந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் 4வது வார்டு பில் கலெக்டர் சதீஷ்யை பாராட்டினார். மேலும் வடக்கு மண்டலத்தில் மண்டல தலைவர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மூலம் புதிய சொத்துவரி புத்தகம், பெயர் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றதையும் பாராட்டினார்.


இக்கூட்டத்தில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில், ‘‘ ஸ்ரீ ராம் நகர், முல்லை நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும். மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் போது அந்த மண்கள் ரோட்டில் வைக்கப்படுகின்றன. இதனை உடனடியாக அகற்றி தர வேண்டும். பொதுக்கழிப்பிடங்களில் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,’’என்றார்.


இக்கூட்டத்தில் உதவி கமிஷனர், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img