திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட தேனிமலை அண்ணா நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கதர்ப்பகராஜ் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட தேனிமலை, அண்ணா நகர் மற்றும் மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 1706 குடும்பங்களில் தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பொருட்டு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நில அளவை பணிகள் மேற்கொண்டு நடைமுறையில் உள்ள அரசாணையின்படி பொதுமக்களுக்கு விரைந்து பட்டா வழங்க அறிவுறுத்தினார்.



