Homeபிற செய்திகள்ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்

ரூ.1.30 கோடியில் நலத்திட்ட உதவிகள் – கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், எடையபாளையம் கிராமம், ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்து றையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட அவர் கூறியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு அரசு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட் சியை தேர்ந்தெடுத்து அரசுத் துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம், ஊத்துக்குளி வட் டம், எடையபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளை தீர்வு காண்பது ஆகும். எடையபாளையம், தொட்டிபாளையம், காளிங் கராயன்பாளையம், திருவள்ளுவர் நகர், வெங்கமேடு, கொமரகவுண்டம்பாளையம், கொமரபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்காக ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று தங்களுடைய கோரிக்கைகளை வழங்கி வந்தார்கள். தற்போது மக்கள் வாழும் பகுதியான அந்த ஊராட்சிக்கே அரசு அலுவலர்கள் வந்து மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் வந்துள்ளது.

அதன் வெளிப்பாடாக எடையபாளையம் கிராமத்திலே நல்ல முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
100% அனைத்து திட்டங்கள் குறித்தும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றியும், என்ன என்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்பது பற்றியும் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும்.

மேலும், கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.16.79 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.8.64 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.19,484/- மதிப்பீட்டிலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.96,332/- மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.14.25 லட் சம் மதிப்பீட்டிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.63,000/- மதிப்பீட்டிலும்,
மகளிர் திட்டம் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.70.50 லட்சம் மதிப்பீட்டில் கடனு தவிக்கான காசோலைகளையும், தாட்கோ சார்பில் 3 பயனா ளிகளுக்கு ரூ.16.98 லட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,120/- மதிப்பீட்டில் உபகர ணங்களையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி சட்டம்-2005 தனிநபர் வேலைக் கான அட்டை பெறும் 5 பயனாளிகளுக்கு ரூ.1.48 லட் சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 117 பயனாளிகளுக்கு ரூ.1,30,55,554/- மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ஊத் துக்குளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி பிரேமா ஈஸ்வரமூர்த்தி, இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி, ஊத்துக்குளி வட்டாட்சியர் சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலு வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img