யூத் ஹாஸ்டல்ஸ் பவளவிழா ஆண் டின் 37 வது விழாவாக கொங்கு கிளையின் சார்பில் திண்டல் மாநகராட்சி பள்ளியில் தேசிய விஞ்ஞான தினம், ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் மற்றும் சரோஜினி நாயுடு பிறந்த தினங்களை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளியின் ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியை சிவகாமி, ஆசிரியை மாலாதேவி, அமுதா, செயற்குழு உறுப்பினர்கள் சூர்யா, கனகராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல் செய்திருந்தார்.