திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் முறையாக பணியில் இருக்கின்றார்களா என்பதையும் மருந்தகத்தில் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதையும் மேலும் விஷக்கடி மற்றும் வெறி நாய்கடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்கள். ஆரம்பசு காதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகள் விவரம் மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டறிந்து, உள்நோயாளிகளிடம் சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துமனையில் உள்ள ஆய்வகத்தின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பின்பு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவிவரம்,பிறப்பு, இறப்பு போன்ற பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்களிடம் விஷக்கடி,வெறிநாய்கடி தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டுமென்றும் நோயாளிகளிடம் கனிவான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.