fbpx
Homeபிற செய்திகள்சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனியில் நேற்று 70ஆவது கூட்டுறவு வார விழாவினை முன் னிட்டு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங் களையும் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார்.

தேனி மாவட்டம் என் ஆர் டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70 வது கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரியசாமி பங்கேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங் களுக்கு கேடயங்களையும் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம் எல் ஏ சரவணகுமார் ஆண்டி பட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயத்தினை பாதுகாத்திடவும் மற்றும் விவசாய நிலங்களில் வாழ்வாதாரத்தில் மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள துறை கூட்டுறவுத்துறை ஆகும். இதன் காரணமாக கூட்டு றவுத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகள் மக ளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயனடையும் வகையில் கடன் உதவிகளை வழங்கிட உத்தரவிட்டு உள்ளார்கள்.

நிறுவனங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை அளித்தும் விவசா யிகள் கடன்கள் வழங்கியும் நுகர் வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டுக்குரிய சேவைகளை ஆற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசு மகத்தான சாதனை புரிந்து வருகிறது. குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுத்துள்ளார். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img