இந்தியாவின் மிகப் பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், அதிநவீன, பூஜ்ஜியம்-உமிழ்வுகொண்ட, நான்கு-சக்கர சிறிய வணிக வாகனமான Ace EV-யின் விநியோகத்தை தொடங்கியது.
புரட்சிகர Ace EVயின் முதல் வாகனங்கள் தொகுப்பு முன்னணி மின்-வர்த்தகங்கள், FMCG மற்றும் கூரியர் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் லாஜிஸ்டிக்ஸ் சேவை அமேசான், டெல்லிவரி, DHL (எக்ஸ்பிரஸ் மற்றும் சப்ளைசெயின்), பெஃடீஸ், ஃபிளிப்கார்ட், ஜான்சன் கன்சியூமர் ஹெல்த், MoEVing, சேஃப்எக்ஸ்பிரஸ் அண்ட் ட்ரெண்ட் லிமிடெட் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.
புதிய Ace EV, மே 2022-ல் வெளியிடப்பட்டது. அதன் பயனர்க ளுடன் சிறந்த ஒத்துழைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டு, கடுமையான நிஜ உலக சந்தை சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
விடாமுயற்சியுடன் நிர்வகிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பால் ஆதரிக்கப்படும், Ace EV ஆனது தொந்தரவு இல்லாத மின்-சரக்கு இயக்கம் மற்றும் 5 ஆண்டு விரிவான பராமரிப்பு பேக்கேஜ் உடன் முழுமையான தீர்வாக வெளிவருகிறது.
100% இயக்க நேரத்துடன் அதன் வலுவான செயல்திறன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பைப் பெற்றது.
Ace EVன் துணை சுற்றுச்சூழலில் சார்ஜிங் உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தல், அதிகபட்ச வாகனத் தொகுப்புகள் இயக்கத்திற்கான பிரத்யேக மின்சார வாகன ஆதரவு மையங்களை அமைத்தல், டாடா ஃப்ளீட் எட்ஜ் – அடுத்த தலைமுறை உகந்த வாகனத் தொகுப்புகள் மேலாண்மை தீர்வு, டாடா யுனிவெர்ஸின் ஆதரவு ஆகியவை அடங்கும்.
முதல் ஃப்ளீட்
Ace EVகளின் முதல் ஃப்ளீட்டை கொடியசைத்து துவக்கிவைத்த, டாடா மோட்டார்ஸின் செயல் இயக்குநர் கிரிஷ் வாக் கூறியதாவது: இந்திய சாலைகளில் Ace EVகளின் அறிமுகம் பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு இயக்கத்தை நோக்கிய பயணத்தில் ஒரு பெரிய படியை குறிக்கிறது.
எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட முழுமையான தீர்வு, பல்வேறு உள்-நகர விநியோகத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்கிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரு சிறந்த மதிப்பு முன்மொழிவை வழங்குகிறது என்றார்.



