சிமாட்ஸ் தமிழ் மன்றத்தின் சார்பாக சிமாட்ஸ் நிறுவனர் மற்றும் வேந்தர் ந.மா. வீரையன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமு கப்படுத்துவதே சிமாட்ஸ் தமிழ் மன்றத்தின் நோக்கமாகும்.
பட்டிமன்றத்தின் தலைப்பு பொங்கலின் சிறப்பு பல்லுயிர் காக்கும் உழவா அல்லது பண்பாடு போற்றும் மரபா என்பதாகும். மதுரை தீந்தமிழ் கல்லூரி தியாகராசர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்முனைவர் இ.பேச்சிமுத்து நடுவராகப் பணியாற்றினார்.
பொங்கலின் சிறப்பு
பொங்கலின் சிறப்பு பல்லுயிர் காக்கும் உழவே என்னும் தலைப்பில் கோ.லாவண் யா, சவீதா மருந்தியல் கல்லூரி, த.கௌசல்யா, சவீதா செவிலியர் கல்லூரி, ந.திவ்யபிரபா, சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி ஆகியோரும், பொங்கலின் சிறப்பு பண்பாடு போற்றும் மரபே என்னும் தலைப்பில் பொ.ஹரிணி, சவீதா பல் மருத்துவக் கல்லூரி, வி.வித்யா, சவீதா சுகாதார அறிவியல் கல்லூரி, ஆ.திவ்ய பாரதி, சவீதா சட்டக் கல்லூரி ஆகிய மாணவிகளும் பேசினர்.
பொங்கலின் சிறப்பு பண்பாடு போற்றும் மரபே என்று நடுவர் தீர்ப்பளித்தார். வெற்றி பெற்ற அணியினரின் அனைத்து மாணவிகளுக்கும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.
சிறப்பாகப் பேசிய மருந்தியல் கல்லூரி மாணவி லாவண்யாவிற்கு சிறந்த பேச்சாளருக்கான பரிசு வழங்கப்பட்டது.
சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி ஏற்று நடத்திய இந்த நிகழ்வில் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி இயக்குநர் முனைவர் இரம்யா தீபக், சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



