கரூர் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் 12,766 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தங்க வேல் நேற்று வெளியிட் டார். இதனை ஐஓபி முதன்மை மண்டல மேலாளர் திருமுருகன் பெற்றுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இது குறித்து தெரிவித்ததாவது:
2025-26ம் ஆண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் கூட்டு றவு & ஊரக வங்கிகள் வழி யாக வேளாண் கடனாக ரூ.7,532கோடி, குறு – நடுத்தர வர்க்க தொழில் – ஏற்றுமதி கடனாக ரூ.4,543 கோடி, இதர முன்னுரிமை கடனாக ரூ.761.51 கோடி என்று மொத்தம் ரூ.12,766 கோடி முன்னுரிமைக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இலக்கை விட ரூ.718.89 கோடி அதிகமாகும்.
வேளாண் துறைக்கு மட்டும் 59 சதவீதம் தொகை கடனாக ஒதுக் கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கு 35 சதவீதமும் இதர முன்னுரிமை கடனுக்கு ஆறு சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் 2025-26ம் ஆண்டிற்கான கடன் இலக்கை எய்திட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் பிரபாகரன், முன் னோடி வங்கி மேலா ளர் வசந்தகுமார், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் தன சேகரன், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் ரமேஷ், மாவட்ட மேலாளர் தாட்கோ முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.



