இளம் மழலையர் பள்ளி கள் சங்க மாநில தலைவர் கௌதம் கூறியதாவது:- கோவை மாவட்ட இளம் மழலையர்கள் பள்ளிகள் உரிமையாளர்கள் சங்கம் நான்காவது மாநில ஆண்டு பொதுக்குழு கூட்டம், மற்றும் கோவை மாவட்ட இளம் மழலையர் பள்ளிகள் 9வது ஆண்டு பொதுக்குழு வருகிற 6-ம் தேதி (சனிக் கிழமை) காலை 9.30 முதல் கோவை மாநகர், பீளமேடு, மணிமகால் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் 6 வயதுக்கு கீழ் உள்ள இளம் மழலையர் பயிலும் பள்ளிகள், குழந் தைக்கல்வியை செம்மை யாக நடத்திச் செல்ல ஏற்ற கருத்துக்கள் பகிரப்படும். தமிழக இளம் மழலையர் பள்ளிகள் சந்திக்கும் பிரச்சினைகள், குழந்தை பாதுகாப்பில் ஏற்படும் சிக்கல்கள், ஆசிரியர்களுக் கான உளவியல் சிந்தனை கள், நுகர்வோர் விழிப் புணர்வு போன்ற தலைப் புக்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேற்கண்டவாறு அவர் கூறினார்.



