fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு முன்னாள் டிஜிபி டாக்டர் பிரதீப் வி.பிலிப் எழுதிய நூல் 40 மொழிகளில் ஜெர்மனியில் வெளியீடு

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி டாக்டர் பிரதீப் வி.பிலிப் எழுதிய நூல் 40 மொழிகளில் ஜெர்மனியில் வெளியீடு

முன்னாள் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் பிரதீப் வி.பிலிப் ஐபிஎஸ் எழுதிய ஃபிலிப்பிசம் எனும் நூல்,ஜெர்மனி நாட்டில் உள்ள பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் 40 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

தமிழக காவல்துறையில் சிபிசிஐடி டிஜிபி ஆக ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர். பிரதீப் வி.பிலிப் ஐ.பி.எஸ். ஃபிலிப்பிசம்: 3333 மாக் சிம்ஸ் டு மேக்சிமைஸ் யுவர் லைஃப்” என்ற புத்தகத்தை தொகுத்து வெளியிட்டதன் மூலம் இலக்கிய உலகில் வரலாறு படைத்துள்ளார்.

ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், ரஷ்ய மற்றும் போர்த்து கீசியம் போன்ற முக்கிய ஐரோப்பிய மொழிகளும், சீனம், ஹீப்ரு, ஜப்பானிய, கொரியன் மற்றும் இந்தோனேசிய போன்ற முக்கிய ஆசிய மொழி களிலும், தமிழ், பெங்காலி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என ஐந்து முக்கிய இந்திய மொழிகளிலும் என 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்ட “ஃபிலிப் பிசம்“ மூலம் வர லாற்று மைல் கல்லை எட்டியுள்ளார்.

வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய புத்தகக் கண் காட்சியான புகழ்மிக்க பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் இந்த மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் அதிகாரப்பூர் வமாக வெளியிடப்பட உள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில், டாக் டர். பிரதீப் வி. பிலிப் “ஃபிலிப்பிசம்“ இன் 40 மொழிபெயர்ப்புகளின் வெளியீட்டைக் குறிக்கும் கண்காட்சியில் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்க்க உள்ளார்.

இந்நிலையில் பிரண் ட்ஸ் ஆப் போலீஸ் கோவை மாவட்ட ஒருங்கிணைப் பாளர், நிறுவனர் தலைவர் கலாம் மக்கள் அறக்கட்டளை, லயன் செந்தில் குமார் ஆகியோர் இவரது சாதனையை பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளில் ஞானம் மற்றும் அறிவைப் பரப்பு வதில் முனைவர். பிரதீப் வி. பிலிப் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மற்றும் அயராத முயற்சிகளுக்குச் சான்றாக இந்த நிகழ்வு இருப்பதாகவும், இந்தியர்கள், தமிழர்கள் மற்றும் ஆசியர்கள் என்ற வகையில், இந்த அசாதாரண சாதனையில் நாங்கள் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்ட அவர்,, இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் அவருக்கு எங்கள் மன மார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img