fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் AI மையமாக மாறப்போகும் தமிழ்நாடு!

இந்தியாவின் AI மையமாக மாறப்போகும் தமிழ்நாடு!

இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள், 500 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக வைத்து நகரும் சூழலில், தமிழ்நாடு மட்டும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி செயலாற்றி வருகிறது.

அதற்கேற்ப, உலகின் முன்னணி நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை தமிழ்நாட்டில் செலுத்தி வருகின்றன. அதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (கிக்ஷீtவீயீவீநீவீணீறீ மிஸீtமீறீறீவீரீமீஸீநீமீ) செயல்படுத்துவதிலும், தனி இடம் பிடிக்கும் முனைப்பில் தமிழ்நாடு ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இதன் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில், கூகுள், பே பால், அப்ளைடு மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தமிழ்நாட்டில் AI ஆய்வு மையங்களை தொடங்கவும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணிபுரியவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

குறிப்பாக, கூகுள் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் இணைந்து, 20 லட்சம் இளைஞர்களை AI தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பான மற்றும் சரியான AI வழிமுறைகளை வகுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒரு வளர்ச்சி சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிகப்படியான பொறியாளர்கள் இருக்கும் மாநிலமும் தமிழ்நாடு தான். இதனை சரியாக கண்டெடுத்து தமிழ்நாட்டில் காலூன்றுகிறது கூகுள்.

மேலும், தமிழ்நாடு அரசின் முயற்சிகளால் இளைஞர்களை தொழில் சார்ந்து உயர்த்தும் “நான் முதல்வன்” உள்ளிட்ட திட்டங்கள், AI வளர்ச்சிக்கு மிகுந்த அளவில் கைக்கொடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்தியாவின் AI மையமாக மாறப்போகிறது தமிழ்நாடு!

படிக்க வேண்டும்

spot_img