fbpx
Homeபிற செய்திகள்12-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய ஸ்காலர்ஷிப் தேர்வு: ‘சன்ஸ்டோன்’ நிர்வாகம் நடத்தியது

12-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய ஸ்காலர்ஷிப் தேர்வு: ‘சன்ஸ்டோன்’ நிர்வாகம் நடத்தியது

35-க்கும் மேற்பட்ட நகரங்கள் முழுவதிலும் உள்ள 50-க்கும் அதிக மான நிறுவனங்களில் இருப்பைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி உயர்கல்வி தொடக்க நிறுவனங்களில் ஒன்றான சன்ஸ்டோன், பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஸ்காலர்ஷிப் தேர்வை நடத்தியது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்காலர்ஷிப் தேர்வாகக் கூறப்படும் இந்த தேசிய ஸ்காலர்ஷிப் தேர்வு, இந்தியா முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு உதவும்.

உதவித்தொகை

சன்ஸ்டோனின் இணை நிறுவனரும் சிபிஓவுமான அங்கூர் ஜெயின் கூறியதாவது:12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் இளங்கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும், திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நோக்கத்துடன் 2000-க்கும் அதிகமான பள்ளிகளுடன் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய உதவித்தொகை தேர்வை நடத்தினோம்.

சரியான படிப்புகளைத் தொடர்வதன் மூலம் அவர்களின் அபிலாஷை களை பின்பற்ற உதவும் அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு சம வாய்ப் புகளை வழங்குவதில் அயராது உழைக்கிறோம்.

இம்முயற்சியின் மூலம் ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங் குவதன்முலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நிதியுதவி வழங் குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களுக்கு உதவுவதன் மூலம், எங்கள் #EducationThatWorks என்ற தத்து வத்தை பரப்ப முடியும் என்று நம்பு கிறோம் என்றார்.

தேர்வு முடிவுகள் பிப்ரவரி 16, 2023 அன்று அறிவிக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் இளங்கலை மட்டத்தில் பிபிஏ, பிசிஏ மற்றும் பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு உதவும்.பல பள்ளி மாணவர்கள் நிதி நெருக்கடியால் தங்கள் அபிலாஷை களை தொடர முடியாமல் உள்ளனர்.

கல்விச் செலவுகளை உள்ளடக்க, நிதி உதவி அவர்களுக்கு உதவுவதோடு, பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் கல்வியை அணுகுவதை சாத்தியமாக்குகிறது.

ஒரு புது யுக கல்வி தொடக்க நிறுவனமாக, சன்ஸ்டோன், மாணவர்கள் அவர்களின் அபிலாஷைகளை நோக்கி தங்களின் முதல் படியை வைக்க உதவுவதன் மூலம் மிகவும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.

இந்தக் காரணங்களுக்காக, குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காகத் உருவாக்கப்பட்ட நேஷனல் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் மற்றும் அதன் சன்ஸ்டோன் ரைஸ் திட்டம் போன்ற அதன் பல்வேறு புதுமையான அணுகு முறைகள் மூலம் சன்ஸ்டோன் இந்த நிதிச் சிக்கலைத் தீர்க்க உதவுகிறது.

படிக்க வேண்டும்

spot_img