Homeபிற செய்திகள்மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்பு

மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவிகள் மாநில போட்டியில் பங்கேற்பு

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிக்கான மாவட்ட அளவிலான மாணவர்கள் தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவிக்குக்கான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.காலை 7:00 மணிமுதல் தேர்வு நடைபெற்றது.

இந்த விளையாட்டு விடுதி தேர்விற்கு 7, 8, 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 12மாணவிகள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.

மேலும் கால்பந்து, தடகளம், நீச்சல், ஹாக்கி, கபடி உள்ளிட்ட போட்டிகளில் தேர்வு நடைபெற்றதில் 10 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு பெற்ற மாணவிகள் மாநில அளவிலான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வரும் 20 முதல் 25ஆம் தேதி வரை மாநில அளவிளான கால்பந்து போட்டி நடத்த உள்ளதாக தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த கால்பந்து போட்டிக்கு வெயிலின் தாக்கத்தை போக்க நிழற்குடை ஆங்காங்கே அமைத்திருப்பதாகவும் வரும் விளையாட்டு வீரர்கள் வெயிலில் எவ்வித பாதிப்பு ஏற்படக் கூடாது என சிறப்பு ஏற்பாடாக செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img