fbpx
Homeபிற செய்திகள்கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளியில் மாணவர் அறிமுக விழா

கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளியில் மாணவர் அறிமுக விழா

கோவை கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளியில் 15வது மாணவர் அறிமுகவிழா இன்று (ஜூலை 6) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்புப்படை (உள்துறை அமைச்சகம்) கமாண்டன்ட் தினேஷ் பி.தாஹிவத்கர் பங்கேற்றார். மாணவர்கள் சாஷ் மற்றும் பேட்ஜ் ஆகியவற்றுடன் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 பள்ளிக்குழுத் தலைவர்களாகத் தமது பணியினை நிறைவேற்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட இளம் தலைவர்களுக்கு விழாவில் கௌரவ மரியாதை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர் தலைவராக லக்ஷ்யா பரத்வாஜ் மற்றும் பள்ளி மாணவியர் தலைவியாக ஜே.பி.ஸ்நேகாவும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.

 கமாண்டன்ட் தினேஷ் பி.தாஹிவத்கர், திறன்மிகு தலைமைக்கான தவிர்க்கவியலாத் தகுதிகள் குறித்து மாணவர்களுக்கு அடிக்கோடிட்டுக்காட்டி ஒரு செம்மையான உரையை நிகழ்த்தினார். பள்ளி அளிக்கும் வசதிகளையும் வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, உடல் வலிமை, தகவமைப்பு மற்றும் சக மாணவர்களை ஊக்குவித்து ஆதரிக்கும் திறன்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

 முதன்மை விருந்தினர் திறன்களை செம்மைப்படுத்திக் கொள்வது ஒரு மீள் செயல்முறை என்பதுடன் அனுபவ வளர்ச்சி வாழ்க்கையை முழுமையாகவும் பயனுள்ளதாகவும் ஆக்க இளைஞர்களுக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

 கமாண்ட்ன்ட் தினேஷ் பி.தாஹிவத்கர் மாணவர்களின் கலைத்திறனை வெகுவாகப் பாராட்டினார். அதிலும் குறிப்பாக புத்திளந்தலைவர்கள் அறிமுக நிகழ்வின் தொடர்ச்சியாக நடைபெற்ற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை அவர் மிகவும் புகழ்ந்தார். மதிப்புமிக்க விருந்தினர்களை கௌரவமாக வரவேற்றதில் ஏற்பாடுகள் செய்ததில் பள்ளி இசைக்குழுவினரின் பங்கை அவர் பெரிதும் பாராட்டினார்.

 பள்ளித்தலைவர் அருள் ரமேஷ், பள்ளித் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் பள்ளி முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோர் முதன்மை விருந்தினருக்கு ஒரு நினைவுப்பரிசு வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img