தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்திய 21வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், கோவை மாவட்டம் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தமிழக அணியில் 56 மாணவர்கள் கலந்து கொண்டு 37 தங்கம், 20 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்றனர்.
கோவை மாவட்ட அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.