fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கார் - வீட்டுக்கடன் மேளா டிசம்பர் 3ம்...

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கார் – வீட்டுக்கடன் மேளா டிசம்பர் 3ம் தேதி நடக்கிறது

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கார் – வீட்டுக்கடன் மேளா வருகிற 3ம் தேதி நடைபெறுகிறது.


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கோவை வடக்கு பிராந்திய அலுவலகம்-ll சார்பில் கார், வீட்டுக்கடன் லோன் மேளா கோவை சத்தி ரோடு ஜி.பி. சிக்னல் அருகே உள்ள ஜி.பி. கிராண்ட் கேலக்ஸி மேரேஜ் ஹாலில் வரும் (டிசம்பர்) 3ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு சலுகைகள்


இந்த லோன் மேளாவில் 20க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமானதாரர்களும் 10க்கும் மேற்பட்ட முன்னணி கார் டீலர்களும் பங்கு பெறுகின்றனர். மேலும் இந்த லோன் மேளாவில், குறைந்த வட்டி வீதம், கடன் டாக்குமெண்டேஷன் இலவசம், பரிசீலனை கட்டணம் தள்ளுபடி, பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனக் கடன்கள் டேக்ஓவர், வாங்கிய கடன் மீது கூடுதல் கடன் போன்ற சிறப்பு சலுகைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்குகிறது.


வாடிக்கையாளர்கள் எளிதில் கடன் வாங்கும் வகையில் பிரபல கட்டுமான நிறுவனத்தினர், கார் டீலர்கள் கடன் மேளாவில் பங்கேற்கின்றனர். மேலும் கல்விக் கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரசு திட்டம் சார்ந்த கடன் வழங்குவதற்காக தனித்தனி ஸ்டால்கள் அமைத்து சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு பிரியர்களுக்கு புட் கோர்ட் அமைக்கப்பட உள்ளது.


மேலும் கடன் மேளாவில் மாலை 4 மணிக்கு குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இது தொடர்பான தகவல்களைப் பெற 88386 24456, 89034 28902 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img