fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீநாராயண குரு கல்லூரி மாணவர்கள் கல்வி பயணம்

ஸ்ரீநாராயண குரு கல்லூரி மாணவர்கள் கல்வி பயணம்

குமரகுரு நிறுவனங் களால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ நாராயண குரு இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (KI SNGIMS) எம்பிஏ மாணவர்களுக்காக மும்பைக்கு 3 நாள் தேசிய அளவிலான நிதி கல்வி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

KI SNGIMS-ல் இருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் நேஷனல் இன்ஸ் டிடியூட் ஆஃப் செக்யூரிட்டீஸ் மார்க்கெட்ஸ் (NISM), செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI), பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), தேசிய பங்குச் சந்தை (NSE), இந்திய ரிசர்வ் வங்கி நாணய அருங்காட்சியகம் (RBI)ஆகியவற்றை பார்வையிட்டனர்.

முதல் நாளில், மும்பையில் உள்ள என்.ஐ. எஸ்.எம். (NISM) துணை மேலாளர் சங்கேத் அஹிரே NISM இன் வரலாறு மற்றும் நோக்கத்தை விவரித்தார்.
நிகில் ஷிண்டே, மூத்த AGM, மாணவர்களிடம் NISM நோக்கங்கள், இந்திய பங்கு சந்தையில் கிடைக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள், பொது மேலாளர் சஞ்சீவ் பஜாஜ், நவீன யுகத்திற்குத் தேவையான தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்வது பற்றி பேசினர்.

செய்முறை வர்த்தகத்தில் மாணவர் எம்.உகேஷ் முதல் இடத்தைப் பெற்று பரிசு பெற்றார். இரண்டாவது நாள் SEBIக்குச் சென்றனர். உதவி பொதுமேலாளர் ஜாய் அகர்வால் பேசினார்.

பிஎஸ்இ இன்ஸ்டிடியூட் லிமிடெட்டின் மூத்த ஆசி ரியர் சுஹாஸ் வொர்லிகர் இந்தியா மற்றும் ஆசியாவில் பங்குச் சந்தையின் வரலாறு பற்றி விளக்கினார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் நாணய அருங் காட்சியகத்தின் கண் காணிப்பாளர் ஸ்டெஃபி தியோரி மாணவர்களை வரவேற்று, செயல்பாடுகளை விளக்கினார்.
மூன்றாம் நாள் தேசிய பங்குச் சந்தைக்குச் சென்று NSEயின் நோக்கம் மற்றும் நிறுவுதல் பற்றி அறிந்து கொண்டனர்.

கல்வி நிர்வாகம் மற்றும் மாணவர் மேம்பாட்டுத் தலைவர் டாக்டர் பி சியாம்சுந்தர் பயண ஏற்பாடுகளை செய்திருந்தனர். துணைப் பேராசிரியர் சுபர்ணா கோபி நாயர் ஒருங்கிணைத்தனர்.

முதல்வர் டாக்டர் ஆர் பிரேம்குமார், கல்விப் பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img