fbpx
Homeபிற செய்திகள்25 மாணவர்கள் பொறியியல் பயில உதவும் சொலிடன் டெக்னாலஜிஸ்

25 மாணவர்கள் பொறியியல் பயில உதவும் சொலிடன் டெக்னாலஜிஸ்

கோவை சொலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது 25-வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா ஆண்டையொட்டி சமூக பங்களிப்பாக மற்றும் புதிய படைப்பு, சிந்தனைகள் கொண்ட 25 பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து என்ஜினீயரிங் பயில ஆண்டுதோறும் கல்வி உதவி தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சொலிடன் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கணேஷ் தேவராஜ், நிர்வாக இயக்குனர் மேகலா தேவராஜ், இயக்குனர் அர்சுன் சத்தியசீலன், அனிஷ் ஆகியோர் கூறியதாவது:-

திறமையான என்ஜினீயர்கள் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை தொடர்ந்து வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக என்ஜினியரிங் படிப்பை தொடர ஆர்வமுள்ள 25 பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்படும்.

இந்த திட்டம் ஆரம்பத்தில் நகரம், மற்றும் மாநில எல்லைக்குள் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 25 தகுதியான என்ஜினியர்களை உருவாக்கி பட்டம் பெற்றவுடன் எங்கள் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img