Homeபிற செய்திகள்ஈரோடு ஆர்டி நேஷனல் கல்லூரியில் மென்பொருள் தயாரித்து அசத்தும் மாணவர்களுக்கு மடிக்கணினி பரிசு

ஈரோடு ஆர்டி நேஷனல் கல்லூரியில் மென்பொருள் தயாரித்து அசத்தும் மாணவர்களுக்கு மடிக்கணினி பரிசு

ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆர்டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் விருதுபெற்ற இந்நிறுவனத்தில் கல்லூரி மாணவர்களும் பணிபுரிந்து சுயமாக உருவாக்கிய மென்பொருளைத் தாங்களே சந்தைப்படுத்தியதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இம்மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரியின் தலைவர் டாக்டர் செந்தில்குமார், நிர்வாக இயக்குநர். ராகுல் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் மடிக்கணினியை மாணவர்களுக்கு பரிசாக வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். விமலானந்த் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

படிக்க வேண்டும்

spot_img