உலக மகளிர் தினத்தையொட்டி சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என் ஜினியரிங் கல்லூரியில் ‘அதிகாரமிக்க பெண்கள் மூலம் பெண்களை மேம்படுத்துதல்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் இங்கிலாந்தின் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் ஆலோசகர் இவோன் என்டியாமோவா, சென்னை, ஆஸ்கார் அன்ட் பொன்னி ஆர்கிடெக்ட் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை கட்டிடக்கலை நிபுணருமான பொன்னி எம். கான்செஸ்சோ, இந்தியா – மேற்கு ஆஸ் திரேலியா அரசின் முத லீடு மற்றும் வர்த்தக ஆணையர் நஷித் சௌத்ரி மற்றும் அங்கிள் சாம்’ஸ் கிச்சன் குழுமத்தின வணிக வளர்ச்சி இயக்குநர் குனிட் சிங்கிள் ஆகியோர் தங்களின் அனுபவம், வணிகம் சார்ந்த பார்வை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் உலகளாவிய ஈடுபாட்டுத் துறையின் இந்தியாவிற்கான மூத்த கூட்டாண்மை அதிகாரி சோனு ஹேமானி இந்த குழு விவாதத்திற்கான நடுவராக இருந்து செயல்பட்டார்.
சிமாட்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக் டர் சதாராம் சிவாஜி, சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் , முதல்வர் டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோரும் குழு விவாதத்தில் கலந்து கொண்டனர்.