fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘ஹின்ஸ்பையர்’ கோலாகல விழா

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘ஹின்ஸ்பையர்’ கோலாகல விழா

கோவை, ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந் துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி விழா ‘HINSPIRE 2023’ கலாம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

ஹின்ஸ்பையர்-2023 கல்லூரி விழாவில் , சிறப்பு விருந்தினர்களாக சினிமா மற்றும் பிக் பாஸ் (தமிழ்) புகழ் ரைசா வில்சன், பியார் பிரேமம் காதல், எப்ஐஆர், காஃபி வித் காதல், வர்மா, பொய் கால் குதிரை, கருங்காபியம் மற்றும் விஐபி போன்ற படங்களில் நடித்துள்ளார் .

இவருடன் கனா, தும்பா, ரஜினிமுருகன், துணிவு போன்ற திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷன் கலந்து கொண்டார்.
முதல்வர் முனைவர் ஜெ ஜெயா வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.

சாதனைகள்

இதில் இந்துஸ்தான் மாணவர்களின் கல்வி சாதனை, தொழில் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு, சிறந்த ஆராய்ச்சி மையம், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள், தொழில்முனைவோர், உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூக சேவை, முன்னாள் மாணவர் ஈடுபாடு மற்றும் ஆசிரிய செறிவூட்டல் மற்றும் ஆராய்ச்சி கலாச்சாரம் போன்றவற்றில் இந் துஸ்தான் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு எடுத்துரைத்தார்.

தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் கே.கருணாகரன், டீன் முனைவர் மகுடீஸ்வரன் கலந்துகொண்டனர். துறை வாரியாக கல்வி, வேலைவாய்ப்பு மற் றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு அறங் காவலர் சரசுவதி கண்ணையன் , இணைச் செயலாளர் முனைவர் பிரியா சதீஷ் பிரபு, யமுனா சக்திவேல் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌர வித்தனர். மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சுமார் 5000 மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முனைவர் அனந்த மூர்த்தி மின்னியல் துறை, முனைவர் சரவணசுந்தரம், முனைவர் ஷங்கர், முனைவர் ராஜேஷ் கண்ணா மேற்பார்வையில், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்தது.

படிக்க வேண்டும்

spot_img