மாநிலம் முழுவதும் உள்ள தனிச்சிறப்புடைய இளம் சாதனையாளர்களை ஊக்குவிக் கவும் ஆதரிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியான, ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் ‘சூப்பர்கிட்ஸ் விருது 2023’ விழாவில், பிராண்ட் எண்டோர்சர் சினேகா பிரசன்னா, ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட் மற்றும் கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை இயக்கு அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர் ஆகியோர் சாதனையாளர்களுக்கு கோப்பை களை வழங்கினர்.
‘சூப்பர்கிட்ஸ் 2023’
‘சூப்பர்கிட்ஸ் 2023’ பல் வேறு துறைகளில் தங்கள் சாதனைகளால் மாநிலம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை கௌரவித்தது.
வரலாற்றிலே மிகவும் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒரு வராக அறியப்படும் குகேஷ் டி அங்கீகரிக்கப்பட்டார். அவர் தனது 12-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
லிடியன் நாதஸ்வரம், 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய நட்சத்திர இசைக்கலைஞர். அவர் CBS- இன் The World’s Best போட்டி சீசன் 1- இல் உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.
வினிஷா உமாசங்கர், ஒரு கலைஞர், TEDx பேச்சாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். தனது கண்டுபிடிப்பான, சோலார் அயர்னிங் கார்ட் மூலம் நன்கு அறியப்பட்டவர். கிளாஸ்கோவில் நடந்த UN காலநிலை மாற்ற மாநாடு COP26-இல் பேசியுள்ளார்.
பிரசித்தி சிங், சமூக தொழில்முனைவோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் பிரசித்தி வன அறக்கட்டளையின் நிறுவனர். இவர் 10 வயதிலேயே, பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற்றவர்.
டாக்டர் ப்ரிஷா கே, மத்திய அரசின் NCPCR சான்று பெற்ற, பார்வையற்றோருக்கான இளம் யோகா ஆசிரியர். 70 உலக சாதனைகளைப் படைத்தவர். அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர் மற்றும் யோகா தெரபியின் இள வயது எழுத்தாளர் போன்ற பல பட்டங்களை வென்றுள்ளார்.
விழாவில் பேசிய ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட்ஸ் & கேக்ஸ் க்ளஸ்ட ருடைய தலைமை இயக்கு அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர், ‘குழந்தைகளுக்கு பலதரப்பட்ட துறைகளை வெளிப்படுத்துவது முக்கியம். பின்னர் அவர்களின் ஆர்வத்தை அடையாளம் கண்டு அவர்களின் வேட்கையை ஊக்குவிக்க வேண்டும்’ என்றார்.
பிரபல நடிகரும், பிராண்ட் எண்டோர்சருமான சினேகா, “ஒருவரின் பலத்தை வளர்ப்பதும், அதில் நம்பிக்கை வைப்பதும் மிகவும் முக்கியம் என்று உறுதியாக நம்புகிறேன். பெரிய தோ சிறியதோ, சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு கொண் டாடப்பட வேண்டும்’ என்றார்.