fbpx
Homeபிற செய்திகள்கடந்த கால கதைகளைச் சொல்லும் சிற்பங்கள்: கோவையில் கைவினைப்பொருட்கள் விற்கும் ‘சிலை’ கடை 2ம் கிளை...

கடந்த கால கதைகளைச் சொல்லும் சிற்பங்கள்: கோவையில் கைவினைப்பொருட்கள் விற்கும் ‘சிலை’ கடை 2ம் கிளை உதயம்

கோவையில் “சிலை” எனும் புதிய கலை, நகர் மற்றும் பாரம்பரிய கைவினை பொருட்கள் கடை திறக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியம், கலை, ஆன்மிகம் ஆகிய மூன்றையும் ஒருங் கிணைத்து “சிலை” என்ற பெயரில் சிலைகள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே ஆர்.எஸ்.புரத்தில் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளை திறக்கப்பட்டது.

சிலை நிறுவனத்தின் நிறுவனர் அருண் டைட்டன், இணை நிறுவனர் சவுமியா, தினேஷ்பாபு, ராகுல் கிஷன், தினேஷ் அருணாசலம் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து செல்லும் கதையைச் சொல்லும் விதத்தில், நவீனத்தையும் பாரம் பரியத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த கடை திறப்பு நிகழ்ச்சியில் கே.ஜி.மருத்துவமனை தலை வர் பக்தவத்சலம், குமரகுரு கல்வி நிறுவனத் தலைவர் சங்கர் வாணவராயர், சிறுதுளி வனிதா மோகன், கிருஷ்ணா ஸ்வீஸ்ட் இயக்குனர் கிருஷ்ணன், நேச் சுரல்ஸ் சலூன் குமாரவேல் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு சிற்பங்கள் மட்டுமின்றி, வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆன்மிகம் தொடர்புடைய அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 12 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்கள், திருவள்ளுவர், நடராஜர், விவேகானந்தர் ஆகியோரின் சிற்பங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இதுகுறித்து நிறுவனர் அருண் டைட்டன் கூறுகையில், “கோவையில் மக்கள் பாரம்பரியத்துடன் ஆன்மிகத்தை இணைக்கும் இடமாக ‘சிலை’ இருக்கும். கை வினைஞர்களை ஊக்குவித்து, உலகளாவிய தரத்தில் கலைப் பொருட்களை வழங்குவதே எங்களின் நோக்கம்.

ரூ.999 முதல் இங்கு பொருட்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் விருப்பப்படி சிற்பங்கள் உருவாக்கித்தரப்படும். மேலும் விவரங்களுக்கு www.silaii.com இணையதளத்தைப் பார்வையிடலாம்.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img