fbpx
Homeபிற செய்திகள்ஒரேநாளில் பயிர்க்கடன்- முன்னோடியான திட்டம்!

ஒரேநாளில் பயிர்க்கடன்- முன்னோடியான திட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் நேற்று தொடங்கி வைத்துள்ள உடனடி பயிர்க்கடன் திட்டத்தின் கீழ் கூட்டுறவு கடன் சங்கங்களிடம் இருந்து ரூ 5 லட்சம் வரை கடன் பெறலாம்.

இதற்காக விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கி கணக்கில் பயிர்க்கடன் தொகையை உடனடியாகப் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் தேவையற்ற அலைச்சல், காலதாமதம் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


வங்கிகளுக்குக் சென்று விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் 7 நாள் வரை ஆகலாம். தற்போது இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் கிடைக்கும். அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். தர்மபுரி மாவடத்தில் தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. வங்கி கணக்கிலேயே கடன் வரவு வைக்கபடும்.


விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ, இணைய வழியிலோ தங்களது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணைக் கொண்டு பயிர்க்கடன் விண்ணப்பிக்கும் மிக எளிமையான முறை உருவாக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் மற்றும் கிளை மேலாளர் தங்கள் கணினி வழியே விவசாயிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து கடன் தொகையை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பர்.


இணையவழியில் கடன் பெறும் இத்திட்டம் நடப்பாண்டிலேயே… விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் படிப்படியாக சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், சிறு, குறு வணிகக்கடன் என பிற வகைக் கடன்களையும் இணைய வழியிலேயே விண்ணப்பித்துப் பெறுமளவிற்கு நடப்பாண்டிலேயே இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொன்றும் முத்தான திட்டங்கள். அவற்றைக் கோர்த்து அவர் சூடியிருக்கும் அந்த முத்துமாலையின் டாலரில் விவசாயிகளின் வாழ்விற்கு ஒளி தரும் வைரமாக இணைய வழியில் பயிர்க்கடன் பெறும் திட்டம் இணைந்துள்ளது.


இந்த திட்டமானது நாட்டிற்கே முன்னோடியான திட்டம் ஆகும்!

படிக்க வேண்டும்

spot_img