ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நல வாழ்வு மையம் ‘தொடங் கப்பட்டிருப்பதை அறி வித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவ மடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப்பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும் வழங்குவதை பிரத்யேக நோக்கமாக கொண்டுள்ளது. இம்மையத்தை, புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஷாலினி அஜித்குமார், முன்னணி மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன் னிலையில் திறந்து வைத்தார்.
காவேரி மருத்துவமனை யின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர். ஸபீஹா கூறியதாவது:
காவேரி மகளிர் நலவாழ்வு மையத்தில், நாங்கள் மருத்துவ நிபுணத் துவத்தையும், கனி வையும் ஒன்றிணைத்து, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை யின் முதுநிலை குடும்பநல மருத்துவர் கவிதா சுந்தரவதனம் கூறுகையில், “மகளிர் ஆரோக்கியத் திற்கு வழக்கமான உடல் பரிசோதனைகளைத் தாண்டிய ஒரு சிறப்பு கவ னம் தேவைப்படுகிறது” என்றார்.
காவேரி மருத்துவமனை களின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், இந்த மையம், தங்கள் ஆரோக்கியத்திற்குப் பெண்கள் தயக்கமின்றி முன்னுரிமை அளிக்க ஊக் குவிக்கும் என்றார்.
இதில் மகளிர் நல வாழ்வு மையத்தின் மருத்துவக்குழுவில் டாக்டர் மீனா உமாசந்தர் (முது நிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸபீஹா (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் வைஷ்ணவி லக்ஷ்மன் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் -சிறுநீர்ப்பை மருத்துவம்), டாக்டர் அனிதா (முது நிலை ஆலோசகர், மகப் பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் ஸ்ருதி ஸ்ரீதர் (முதுநிலை ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்), டாக்டர் அனு ரமேஷ் (முதுநிலை ஆலோ சகர், சிறுநீர் பாதையி யல்), டாக்டர் சாந்தி (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அருள் மொழி மங்கை (ஆலோ சகர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை) மற்றும் டாக்டர் கீர்த்தி (இணை ஆலோசகர், மார்பக அறுவை சிகிச்சை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



