Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் உயர்கல்வி நிறுவனத்தில் மகளிர் நலன் கருத்தரங்கு

அவினாசிலிங்கம் மனையியல் உயர்கல்வி நிறுவனத்தில் மகளிர் நலன் கருத்தரங்கு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் மனையியல் பள்ளி மற்றும் சுகாதார அறிவியல் பள்ளியின் மருத்துவ உளவியல் துறை மற்றும் மனையியல் பள்ளியின் மகளிர் ஆய்வுமையம் இணைந்து, “பெண்கள்நலன்: ஆரோக்கியமானமனம், உடல் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய சுயத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான நிகழ்வு கடந்த 16ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் 91 எண்ணிக்கையிலான இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெண்களின் முழுமையான நலன் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்து
வதுடன், தனிப்பட்ட மற்றும் உணர்வுசார் நலனைப் பேணுவதற்கான ஆரோக்கியமான அணுகுமுறைகளை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகஇருந்தது.
நிகழ்வின் மையக்கருத்திற்கு ஏற்ப, ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய சுயத்தை உருவாக்குவதன் மூலம்
பெண்களை வலுப்படுத்துவதில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்தியது.

நிகழ்ச்சியில் டாக்டர் தேசிகா மற்றும் டாக்டர் தேவயானி சண்முகம் ( BHMS, M.A. Psychology, Hahnemann Homoeo Clinic, Erode) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் தேசிகா பேசுகையில் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான சுய உணர்வை வளர்த்துக் கொள்வது குறித்து எடுத்துரைத்தார். மேலும், நம்பிக்கையின் முக்கியத்துவம், அதனைத் தன்னம்பிக்கையாக வளர்த்துக் கொள்வது மற்றும் தனிநபராக தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்து விளக்கினார். இவர்jSafe Z Aesthetics, Coimbatore-இன் நிறுவனர்,Homoeopathic Consultant, Aesthetic Physician மற்றும் Women Wellness Trainer
ஆவார்.

டாக்டர் தேவயானி சண்முகம் பேசுகையில், மாதவிடாய் சுகாதாரம், மாதவிடாய் குறித்த புரிதல், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, றிசிளிஞி மற்றும் றிசிளிஷி தொடர்பான அடிப்படை விழிப்புணர்வை வழங்கினார். மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் தாமதமின்றி மருத்துவ மற்றும் தொழில்முறை உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் மற்றும் உளவியல் நலவாழ்வு குறித்த பயனுள்ள புரிதலைப் பெறுவதற்கான சிறந்த தளமாக அமைந்தது. தங்களது உடல்நலம், மனநலம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து அதிக விழிப்புணர்வுடன் செயல்படுவதற்கும், ஆரோக்கியமான மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கும் இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை ஊக்குவித்தது. முன்னதாக உமாதேவி வரவேற்புரைஅளித்து, சிறப்பு
விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img