நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டாக்டர் பிரசன்னகுமார் ஆச்சார்யா பொறுப்பேற்றார். முன்னாள் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு இவரை நியமித்தது.
சுமார் 30 ஆண்டுகள் மின்சாரம், சுரங்கம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் கொண்ட இவர், என்.எல்.சி.யை மேலும் வலுப்படுத்தி, ‘மகாரத்னா’ தகுதிக்கு உயர்த்தும் இலக்குடன் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



