fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராட்சி செய லாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட தலைவருமான செங்கதிர்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.

இதில், மாவவ்ட பிரச்சார செயலாளர் முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் மல்லிகா, மாதேஷ், ரமேஷ், முருகன், முனியப்பா, ராஜா, மூர்த்தி, வெங்கடேஷ், மாதேஷ், அமுல்ராஜ், மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முடிவில், கிருஷ்ணகிரி ஒன்றிய தலைவர் ராகவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு சிலை, தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை ரூ.10 ஆயிரம் ஆகவும் ஒட்டுமொத்த தொகை ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊராட்சி செயலாளர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது போல், கவுன்சிலிங் முறையில் வட்டத்திற்குள் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் காரணமாகவும், பல்வேறு அழுத்தங்களின் காரணமாகவும் ஊராட்சி செயலாளர்களை தன்னிச்சையாக பணியிட மாற்றம் செய்வதை தவிர்த்து, கவுன்சிலிங் முறையில் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img