Homeபிற செய்திகள்டாக்டர் கல்பனா சங்கரின் தி சயின்டிஸ்ட் என்டர்ப்ரனர் எம்பவரிங் மில்லியன்ஸ் ஆஃப் வுமன் புத்தகம் வெளியீடு

டாக்டர் கல்பனா சங்கரின் தி சயின்டிஸ்ட் என்டர்ப்ரனர் எம்பவரிங் மில்லியன்ஸ் ஆஃப் வுமன் புத்தகம் வெளியீடு

டாக்டர் கல்பனா சங்கரின் தி சயின்டிஸ்ட் என்டர்ப்ரனர் எம்பவரிங் மில்லியன்ஸ் ஆஃப் வுமன் என்ற நூலை உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் சென்னையில் வெளியிட்டார்.

இந்த நூல், முனைவர் சங்கர் அணு விஞ்ஞானியிலிருந்து தொழில்துறையில் முன்னோடி சக்தியாக உருவெடுத்த அசாதாரண மாற்றத்தை விவரிக்கிறது. இது இளம் தொழில்முனைவோர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, பெண் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கான விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குகிறது.

டாக்டர். சங்கர் தனது முன்முயற்சிகள் மூலம் 4.15 மில்லியன் குடும்பங்களின் வாழ்க்கையை முன்னேற் றியுள்ளார் மற்றும் 112,000 பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை நிறுவுவதற்கு உறுதுணையான இருந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஜோகோ கார்ப்பரேஷன் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தனது சுயசரிதை பற்றி டாக்டர். கல்பனா சங்கர் பேசுகையில், “தொழில் முனைவோராக உருவெடுக்கும் கனவுகளைக் கொண்ட பெண்களுக்குப் பாலினம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை இதன் மூலம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img