fbpx
Homeபிற செய்திகள்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் திறனை ஊக்கப்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டங்கள் கோவை கல்லூரி விழாவில் இணை...

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் திறனை ஊக்கப்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டங்கள் கோவை கல்லூரி விழாவில் இணை அமைச்சர் பேச்சு

கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜல்சக்தி மற்றும் பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் துடு கலந்து கொண்டார்.

மாவட்ட முன்னோடி வங்கி யான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் கடன் உதவி திட்டங்கள் மற்றும் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் திட்ட பயனாளிகள், மாணவ, மாணவிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், கோவிட் தொற்று பரவலின் போது இந்திய நாட்டின் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தி உள்நாட்டிலேயே கோவிட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் நாட்டின் முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டு தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்திராயன்3 விண்கல ஆராய்ச்சியின் மூலம் நிலவின் தென் துருவத்தை முதல் நாடாக இந்தியா அடைந்ததாகவும், இந்த தொழில் நுட்பங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டது பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கற்பகம் கல்லூ ரியை சேர்ந்த நாட்டு நலத்திட்ட மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்.

படிக்க வேண்டும்

spot_img