பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது இதனை ஒட்டி அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் பள்ளிகள் போன்றவற்றில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டார். மேலும் போலீசார் மற்றும் அமைப்பு பணியாளர்கள் வேட்டி சேலையில் இதில் கலந்து கொண்டனர். பின்னர் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பொங்கல் வழங்கி பண்டிகையை சிறப்பித்தனர்.
அப்போது கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பொங்கல் பண்டிகையையொட்டி மாநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.
சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகர் முழுவதும் நடந்து வருகிறது. போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாளை காலை 5 மணிக்கு நான் உட்பட போலீசார் சைக்கிளிலில் பேரணியாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சண் முகம், சுகாசினி, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடிய தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சேலையில் கலந்து கொண்டனர்.
பெண் ஊழியர்களுக்கு கோலப்போட்டிள் நடத்தப்பட்டது.
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து வந்து இந்த விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.