சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினி யரிங் கல்லூரி சார்பில் தண்டலத்தில் உள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அன்ட் டெக்னிக்கல் சயின்சஸ் வளாகத்தில் சவீதா பன்முக கல்வி – வருடாந்திர ஆராய்ச்சி மாநாட்டில், காட்சிப்படுத்தப்பட்ட போஸ்டர்களில் 100 போஸ்டர்கள் சிறந்த போஸ்டர்களாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
மாநாடு எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மாநாடாகும். இது கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றலில் கவனம் செலுத்துகிறது. எதிர்கால பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்காக இந்த மாநாடு சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் மொத்தம் 1000 போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் சிறந்த 100 போஸ்டர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு சிமாட்ஸ் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டிப் பேசினார்.
டாக்டர் சுதீர் குமார், இயக்குநர்- திறன் மேம்பாடு, திட்டம் மற்றும் பல்கலைக்கழகத் தலைவர், இஸ்ரோ மற்றும் எஸ். செல்வராணி, புத்தாக்க அதிகாரி, மத்திய கல்வி அமைச்சகம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினார்கள்.
சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், முதல்வர் டாக்டர் பி. ரமேஷ், சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் டீன்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிமாட்ஸ் பல்கலைக்கழகத்தின் சிமாட்ஸ் ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் கல்லூரியின் ‘டெக் ஸ்டார் மாநாடு’ என்பது இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், இந்த ஆண்டு ஆராய்ச்சி மற்றும் கல்வியில் புதுமையை நிரூபிக்கும் வகையில் 4 ஆயிரம் இளநிலை ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் 17 ஆயிரம் மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



