கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து, பழங்குடியினர் ஊட்டச்சத்து முகாமினையும், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட துவக்க விழாவையும் நடத்தியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரும் மாவட்ட வன அலுவலருமான ஆர்.கிருபாசங்கர், முகா மினை துவக்கி வைத்து பேசும்போது, கரும்பு ஆராய்ச்சித் திட்டங்கள் மட்டுமின்றி ‘பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்தினையும்’ இந்நிறுவனம் சிறப்பாக செயல்படுத்தி வருவதைக் குறிப்பிட்டு, தத் தெடுக்கப்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த பழங் குடியினர், நிறுவனத் தின் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பழங்குடியினருக்கு வானொலிப் பெட்டிகள் வழங்குவதோடு மட்டு மின்றி “வானொலி நிகழ் ச்சிகளுக்கான தினசரி அட்டவணையையும்”’ அளிப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும், என்றார் அவர்.
கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் முனைவர் ஜி.ஹேமபிரபா தலைமை தாங்கி பேசும்போது, கல்வி மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கும், செழுமைக் கும் வழிவகுக்கும் என்பதை பழங்குடியினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
‘சர்வதேச சிறுதானிய ஆண்டு
பள்ளி செல்லும் பழங்குடியின குழந்தைகள், குறிப்பாக பெண்கள், ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இல்லாதவாறு கவனித்துக் கொள்ளுதல் அவசியம்.
இந்தியாவின் முன் மொழிவின் பேரில் ஐக்கிய நாடுகள் சபை 2023 -ம் ஆண்டை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டாக’ அறிவித்துள்ளது.
சிறு தானியங்கள அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகளை கொண்டிருப்பதால் , பழங்குடியினரின் உணவு முறையில் சிறுதானியங்கள் , மீண்டும் ஒரு முக்கிய இடத்தைப் பெற வேண்டும் என்றார்.
கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானியும் இத்திட் டத்தின் முதன்மை ஆராய்ச் சியாளருமான முனைவர் து.புத்திர பிரதாப், அறிமுக உரையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமலை பகுதியைச் சார்ந்த இராமரணை, பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய கிராமங்கள், கடம்பூர் பகுதியைச் சார்ந்த பத் திரிப்படுகை ஆகிய கிரா மங்களைச் சேர்ந்த சுமார் 450 பழங்குடியினர் இம்முகாமின் மூலம் பலனடைவர் எனக் குறிப் பிட்டார் .
சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, ஊட்டச் சத்துத் தோட்டம் அமைத்தல், சிறுதானிய சாகுபடி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.



