fbpx
Homeபிற செய்திகள்தூய்மை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாமை ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரி இணைந்து நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு மாநக ராட்சி மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையாளர் என்.கே.சுதா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரி செயலாளர் என்.சதாசிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார நல அலுவலர் பிரகாஷ், மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பி.கே.பழனிச்சாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய நலவாரிய மாநில உறுப்பினர் ஆர்.பி.மோகன், துப்புரவு அலுவலர் என்.தங்கராஜ், ஸ்ரீ வாசவி கல்லூரி கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன், முனைவர் வி. நாச்சிமுத்து, துப்புரவு ஆய்வாளர்கள் எஸ்.கண்ணன், ஏ.பூபாலன், டி.திருநாவுக்கரசு, எஸ்.நல்ல சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஸ்ரீ வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img