fbpx
Homeபிற செய்திகள்தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்டத்தின் நான்காவது காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் டி.பி.சுரேஷ் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கஞ்சா, குட்கா விற்பனை செய்வது சம்மந்தமாக தொடர் சோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்கும் விதமாக கல்வித்துறையும் காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானார் வருவது வழக்கம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img