ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம்தேதிஉலகமனநலதினமாககொண்டாடப்படுகின்றது. இதன் நோக்கம் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவழிகளில் ஆதரவு அளிப்பதும் ஆகும்.
2023 ஆண்டின் உலக மன நல தினத்தின் கருப்பொருள் “ மனநலம் ஒரு உலகளாவிய மனித உரிமை”“ மனநலம் என்பது அனைவருக் குமான மனித உரிமை” என்பதாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதோ ஒரு மன நல பாதிப்பில் அவதிப்படுகின்றார்கள்.
இதில் பதற்றம், மிகை அச்சம் மற்றும் மனச்சோர்வு மிகவும் பொதுவான மனநல பாதிப்புகள் ஆகும். இந் தியாவை பொறுத்த வரை சுமார் 15 கோடிக்கு அதிகமான மக்கள் ஏதாவது ஒரு மனநல பாதிப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுகின்றது.
மனநல பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மரபியல் , உயிரியல் , உளவியல் மற்றும் சமூக வியல் காரணங்கள் ஆகும்.
*தீவிர மன நல பாதிப்புகள் பெரும்பாலும் இளம் வயதினர், மற்றும் நடுத்தர வயதினர் நன்றாக உழைத்து, வருமானம் ஈட்டி, பொருள் சம்பாதித்து, பிற்காலத்திற்கு பொருள் சேர்த்து, தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சந்தோசமாக வைக்கும் காலகட்டத்தில் வருவதால் பாதிக்கப்பட்ட குடும்பமே தொடர் வேதனைக்கும், பொருளாதார பாதிப்புக்கும், உள்ளாகி நிம்மதி இழக்கின்றது, இதனால் குடும்பமும் சமூகம் பாதிக்கப்படுகிறது.
கடந்த 20 வருடமாக மன நல மருத்துவத்தில் மவுன புரட்சி காரணமாக மன நல பாதிப்புகள் குணப்படுத்த கூடியதாகவும், சிகிச்சை அளிக்க கூடியதாகவும், ஓரளவிற்கு தடுக்க கூடியதாகவும், உள்ளது. இதை ஆரம்ப காலத் திலே கண்டுபிடித்து செய்தால் மட்டும் தான் முடியும்.
இந்த பாதிப்புகள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், தொழிலாளி, முதலாளி, குழந்தை, முதியவர், ஆசிரியர், மாணவர் என்ற பால், இனம், வயது, தொழில் பாகுபாடு இன்றி பாதிக்கப்படுவதோடு மட்டும் இல்லாமல், இந்த பாதிப்பு காரணம் செய்வினை கெட்ட ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம், ஏவல் செய்வீர் என்ற மூடநம்பிக்கைகளும், இதைப்பற்றி ,(சமூக நாணம்) மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லா ததால் சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு கிடைப்பது இல்லை.
மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசர்கள், மனநல சமூக பணியாளர்கள் பங்கு மட்டும் அல்லாமல், மன நல தன்னார்வ அமைப்புகள், பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் தீவிர முயற்சியாலும் அரசின் மன நல முகாம்களிலும் தற்போது விழிப் புணர்வு நன்றாக உள்ளது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்
*தற்போது மனநல பாதுகாப்பு சட்டம் 2017 (the mental health care Act 2017) அமலில் உள்ள தால் பாதிக்கப்பட்டவருக்கும், குடும்பத் திற்கும் முழுமையான பாதுகாப்பை கொடுக்கின்றது.
மருந்துவ சிகிச்சை, உளவியல் ஆலோசனை நடத்தை மாற்று சிகிச்சை, மறுவாழ்வு பயிற்சி, குழு சிகிச்சை, மின் அதிர்வு சிகிச்சை, ஆழ்நிலை உறக்க வைத்தியம் குடும்ப ஆலோசனை என்று சிகிச்சை பட்டி யல் நீண்டு கொண்டே போகின்றது.
மனநலம் என்பது உடல்நலம் போன்று முக்கியமானது மன நல பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மன நல பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கலாம். மன நல பாதிப்புகள் பாதிக்கப்பட்டவருக்கு பல்வேறு வளங்களில் தீர்வுகள் உள்ளன.
தடுப்பதற்கான வழிகள்:
- போதுமான தூக்கம்.
- ஆரோக்கியமான உணவு.
- தவறாமல் உடற்பயிற்சி.
- மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகள்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத் தினர்கள் உடன் நெருங்கிய தொடர்பு மற்றும் மனம் விட்டு பேசுவது.
- மனநலம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வது.
“ மன நல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நாம் அனைவரும் ஒன்று பட்டு செயல்படுவோம் “
கட்டுரையாளர்:
Dr. N.S.மணி MD.F.I.P.S
மனநலமருத்துவர்
பாலாஜி மூளை, நரம்பியல் மற்றும்
மனநல மருத்துவ மையம்
1322/1, தடாகம் ரோடு, ஆர். எஸ். புரம், கோவை-2
rnsmony@gmail.com/ Mobile: 9842213043