தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பொம்மசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து ரூ4 லட்சம் மதிப்பீட்டில் டெஸ்க், பென்ச் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டெஸ்க், பென்ச் வழங்கி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி, பள்ளி துணை தலைமை ஆசிரியர் ராஜசேகர், பாமக மாவட்ட துணை தலைவர் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் – பெ.சக்தி, கி.மணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தன், ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் செல்வராஜ், ஒன்றிய அமைப்பு தலைவர் முருகன், பசுமை தாயக ஒன்றிய செயலாளர் செல்வம், ஒன்றிய செயற்குழு வஜ்ஜிரமணி, ஜம்பேரி, கோவிந்தன் மற்றும் ஆசிரியிர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



