fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்

அண்ணாமலைப் பல் கலைக்கழகத் தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையத்தில் கடந்த 2ம் தேதி அன்று 2026-& 2027ஆம் கல்வி ஆண்டிற்கான தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, பதிவாளர் சிங்காரவேல், இணைப்பதிவாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி குமார் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி மையத்தின் வாயிலாக இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங் குவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு 2023-&24-ம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது.


தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி இயக்குனர் அருள் செல்வி, துணை இயக்குனர் சீனிவாசன், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் பல்கலைக்கழக ஆசிரி யர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து விபரங்களையும் ஷ்ஷ்ஷ்.ணீuபீபீமீ.வீஸீ என்ற இணையதள முகவரியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img