கோவை சர்வதேச விமான நிலையத்தில், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை நிறுவிய புதிய மருத்துவ பரிசோதனை அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
கோவையில் விமான ங்களின் எண்ணிக்கையும் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையத்தில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த மருத்துவ பரிசோதனை அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ பரிசோதனை அறையை விமான நிலைய இயக்குநர் ஜி.சம்பத்குமார் திறந்து வைத்தார். நிகழ்வில் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க.மதேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அறையில் மருத்துவ ஆலோசனை, முதலுதவி சிகிச்சை, சிபிஅர், அவசர மருத்துவ சேவைகள் மற்றும் 24 மணி நேர அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்கப்படும். இங்கு நாள் முழுவதும் மருத்துவர் மற்றும் பராமரிப் புப் பணியாளர்கள் பணி யாற்றுவார்கள்.
திறப்பு விழாவில் இந்திய விமான நிலைய ஆணைய மேலாளர் (பொதுப்பணிகள்) சரவணன், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, ராயல் கேர் தலைமை செயல் அலுவலர் டாக்டர் கே.டி.மணி செந்தில்குமார், மற்றும் ராயல் கேர் தலைவர் அலுவலகம் மேலாளர் லலித் சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விமான நிலைய மருத்துவ சேவைகளுக்காக, பயணிகள் 74492 55000 என்ற ஹெல்ப் லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.



