fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் 63 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த கோவை ரௌத்ரா அகாடமி...

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் 63 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த கோவை ரௌத்ரா அகாடமி மாணவர்கள்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன், 29-வது அகில இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகள் – 2026 கோவா மாநிலம் மார்கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கடந்த ஜனவரி 24 முதல் 26 வரை நடைபெற்றது.

இப்போட்டியில் சிலம்பம், குத்துச் சண்டை, வில்வித்தை, கராத்தே மற்றும் யோகா ஆகிய பிரிவுகள் இடம்பெற்றன. சிலம்பப் போட்டியில் மட்டும் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டைப் பிரதிநிதித்து வப்படுத்திப் பங்கேற்ற கோயம்புத்தூர் ரௌத்ரா அகாடமி மாணவர்கள், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, மான் கொம்பு, சுருள் வாள், வேல் கம்பு, தொடு முறை சிலம்பம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் 10, 14, 17, 21 ஆகிய வயது வரம்புகளில் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் ரௌத்ரா அகாடமி மாணவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு 55 தங்கம் மற்றும் 8 வெள்ளி என மொத்தம் 63 பதக்கங்களை வென்று அசாத்திய சாதனை படைத்தனர். இந்த வெற்றியின் மூலம், வரும் மே மாதம் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச சிலம்பப் போட்டிகளுக்கு இம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ஷிநிகிஞிதி அமைப்பின் நிறுவனரும் இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் வீரருமான சிவம் தாக்கூர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.

இச்சாதனை புரிந்த மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் வினோத் குமார், வெங்கடேஷ், சூரியநாராயணன், பாண்டீஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் மதுஜா ஸ்ரீ ஆகியோரையும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வெற்றி குறித்து பேசிய பயிற்சியாளர்கள் தமிழக அரசு சிலம்பம் சுற்றுபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவும், சிலம்பத்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து மத்திய அரசை போல் யோகா மற்றும் சிலம்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிகள் நடத்தப்பட வேண்டும், பள்ளிகளில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img