fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு முழுவதும் ‘ரோட் ஷோ’ லேப்கேர் நிறுவனம் நடத்தியது

தமிழ்நாடு முழுவதும் ‘ரோட் ஷோ’ லேப்கேர் நிறுவனம் நடத்தியது

தமிழ்நாடு முழுவதும் ரோட்ஷோ நிகழ்ச்சியை லேப்டேப் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனமான லேப்கேர் நிறுவனம் நடத் தியது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனையில் தேசிய அளவில் முன்னணி நிறுவ னமாக திகழும் லேப்கேர் நிறுவனம் கோவை, திருச்சி மற்றும் மதுரையில் டீலர்களுக்கான மெகா ரோட்ஷோ நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் ஒவ்வொரு இடத்திலும் 125 டீலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் நடந்த இந்த ரோட்ஷோ நிகழ்ச்சிக்கு கோவை ஐடி அசோசியேஷன், மதுரை கம்ப்யூட்டர் டீலர் அசோசியேஷன் ஆகி யவை இணைந்து ஆதரவு அளித்தன.

லேப்கேர் நிறு வனத்தின் தகவல் தொழில்நுட்பத்திற்கான ஹார்டுவேர், நுகர்வோ ருக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபிலிட்டி மற்றும் நெட்வொர்க் உப கரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

உதிரி பாகங்கள்

லேப்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அதுல் குப்தா கூறுகையில், எங்கள் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள பல வினியோகஸ்தர்களுடன் கைகோர்த்து, பிராந்திய விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களை அமைத்து இருப்பதோடு, பிராந்திய அளவிலான உதிரி பாகங்கள் இருப்பு மையத்தையும் அமைத்துள்ளது.

விற்பனை, மார்க்கெட்டிங், சேவை மற்றும் தளவாடப் பிரிவில் வலிமைமிக்க மனித வளக் குழுவைக் கொண்டுள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் சிறந்த தகவல் தொழில்நுட்ப உதிரி பாகங்களுக்கான பிராண்டாக இருக்க வேண்டும் என்பதே நோக் கமாகும் என்றார்.

மதுரை கம்ப்யூட்டர் டீலர் அசோசியேஷன் தலைவர் சரவணன் மற்றும் கோவை ஐடி அசோசியேஷன் தலைவர் குணசீலன் ஆகியோர் லேப்கேர் நிறுவனத்தின் ரோட்ஷோ முயற்சி குறித்தும், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் களிடையே அதன் தயாரிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு தங்கள் சார் பில் பாராட்டுகளை தெரி வித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img