fbpx
Homeபிற செய்திகள்பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை வழங்க நடமாடும் மருத்துவ வாகன வசதி துவக்கம்

பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை வழங்க நடமாடும் மருத்துவ வாகன வசதி துவக்கம்

உலகளவில் புகழ்பெற்ற ரேலா மருத்துவமனை, உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, பக்கவாத சிகிச்சையில் இரண்டு முக்கிய முன்னோடி முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த இரு சேவைகளையும், ரேலா மருத்துவமனையின் தலைவர், பேராசிரியர் முகமது ரேலாவின் முன்னிலையில் அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ரேலா மருத் துவமனையின் நரம்பியல் மற்றும் நரம்பு அறிவியல் துறையின் மருத்துவ குழு தலைவர் டாக்டர். சங்கர் பாலகிருஷ்ணன் மற்றும் பெருமூளை இரத்த நாள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். முரளிதரன் வெற்றிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

பக்கவாத சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் நிஜ நிகழ்வுகளிலிருந்து சுவாரஸ் யமான தகவல்களை பகிர்ந்து கொண்டது இப் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருக்கிறது.

பக்கவாதம்/ஸ்ட்ரோக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதியன்று ‘உலக பக்கவாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. பக்கவாதம் வராமல் தடுப்பது, அதன் அறிகுறிகள், அதற்கான சிகிச்சை மற் றும் அதிலிருந்து மீண்டு உயிர்வாழும் நபர்களுக்கான ஆதரவு என்பவை மீது விழிப் புணர்வு மிக முக்கியம்.

பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன சேவைப் பிரிவு, மிக விரைவாக நோயாளிகளைச் சென்றடைந்து தொடக்கநிலை ஆலோசனை ஆகியவற்றை வழங்கும். இது குறித்து பேராசிரியர் முகமது ரேலா, “இந்தியாவில் 100,000 நபர்களில் 105-&152-க்கும் இடைப்பட்ட நபர்களுக்கு பக்கவாத பாதிப்புகள் ஏற் படுவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

‘தங்க நேரம்’ எனப்படும் முதல் 4.30 மணி நேரத்திற்குள் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுமானால், உயிரிழப்பையும் மற்றும் நீண்டகால பாதிப்பான திறனிழப்பையும் பெருமளவில் குறைக்க முடியும்” என்று கூறினார்.

டாக்டர். சங்கர் பால கிருஷ்ணன் பேசுகையில், “மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது இரத்தநாளம் வெடிப்பதால் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த ஆபத்துக் காரணிகளை நிர்வகிக்க மருத் துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதும் அவசியம்,” என்று கூறினார்.

இந்நிகழ்வில் டாக்டர். முரளிதரன் வெற்றிவேல் கூறியதாவது: ரேலா மருத்துவமனையின் நரம்பியல் துறையைச் சேர்ந்த நாங்கள், EEG, EMG,, மின் சமிக்கைகள் பயணிக்கும் வேகம் குறித்த ஆய்வுகள் போன்ற விரிவான நோயறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சையை வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img