நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட் களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதிக்கு வரும் பயணிகள் தண்ணீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே நகர திமுக சார்பில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கலந்துகொண்டு நீர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள், நீர்மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை ராசிபுரம் திமுக நகர கழக செயல £ளர் என்.ஆர்.சங்கர் செய்திருந்தார். நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



