நாமக்கல் நகரில் அமைந்துள்ள புராதன சிறப்பு பெற்ற நாமகிரித் தாயார் உடனுறை அருள் மிகு நரசிம்மர் திருக் கோவில், ஆஞ்சநேயர் மற்றும் அரங்கநாதர் ஆகிய திருக்கோயில்களில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின்போது, தேர் த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு முப்பெரும் தேரோட்டம் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்த் திருவிழாவின்போது, குளக்கரையில் உள்ள நாமகிரித் தாயார் மண்டபத்திலிருந்து, 10 நாட்கள் சுவாமி திருவீதி வீதி உலா நடக்கும். அதற்காக ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் கூடுவர். அதையொட்டி, அங்கு ஒரு மாதம் வரை தேர்க்கடைகள் அமைக்கப்படும்.
இந்தாண்டு தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் குளக்கரை த்திடலில், தேர்க்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளின் திறப்பு விழா நடைபெற்றது. தேர்க் கடைகள் பொறுப்பாளர் ஏ.ஏ.ஏ.அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து, தேர்க்கடைகளைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.