fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 2.31 கோடி பெண்கள், 26,000 திருநங்கைகள் இலவச பேருந்தில் பயணம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 2.31 கோடி பெண்கள், 26,000 திருநங்கைகள் இலவச பேருந்தில் பயணம்

பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் மகளிரை ஊக்குவிக்க நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த பெண்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் 07.05.2021 அன்று பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்டட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் 08.05.2021 முதல் பயணம் செய்ய முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 49.80 சதவீதமாக உள்ளனர். ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

தற்போதைய மாறிவரும் சமூக, பொருளாதார சூழ்நிலையில் மகளிர் உயர்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுய தொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும். தமிழ்நாட்டில், பணிபுரியும் ஆண்களின் விகிதத்தை கணக்கில் கொள்ளும்பொழுது பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு (Women Participation Rate) 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மகளிரும் சிறப்பான பங்களிப்பினை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளில் மகளிரின் பங்களிப்பு விகிதத்தினை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. உயர்கல்வி கற்பதற்காகவும், பணி நிமித்தமாகவும் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்கவிப்பதும், மேற்கூறிய சமூகப் பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக அமையும்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நகரப்பேருந்துகளின் வாயிலாக ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.3,000 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டப்படுவதாகவும், பணிபுரியும் மகளிர் உயர்கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதனால், நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சோளிங்கர் பணிமனையில் 14 நகரப் பேருந்துகளும், ஆற்காடு பணிமனையில் 50 நகரப் பேருந்துகளும் என மொத்தமாக 64 நகரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என பிரத்யேகமான ஒட்டுவில்லைகளையும் (Stickers) ஒட்டி, பேருந்தின் முகப்பில் இளஞ்சிவப்பு (Pink) வண்ணமிட்டும் பெண்கள் சுலபமாக பேருந்தை அடையாளம் கண்டு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இத்திட்டம் மூலம் தினசரி 48,312 மகளிர்களும், கடந்த 08.05.2021 முதல் தற்பொழுது வரை 2.31 கோடி மகளிர்கள் மற்றும் 26,000 திருநங்கைகள் நகரப் பேருந்துகளில் இலவசப் பயண சலுகை பெற்றுள்ளனர்.

கரிவேடு ஊராட்சி

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் கரிவேடு ஊராட்சியைச் சார்ந்த பயனாளி தெரிவித்ததாவது:-
என் பெயர் சகுந்தலா, கணவர் பெயர் பெ.பரமசிவம். நான் தினமும் காலையில் எங்கள் ஊரிலிருந்து சென்று இராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கும் KMK Shoes என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.

முன்பெல்லாம் எனக்கு பேருந்து கட்டணமாக தினந்தோறும் 50 ரூபாய் வரை செலவாகும். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தினார்கள்.

தற்பொழுது பேருந்து செலவிற்காக செலவிடப்படும் தொகையை சேமித்து எனது குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்கிறேன்.
என்னைப் போன்ற ஏழை, எளியோர்களின் கஷ்டத்தை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சியைச் சார்ந்த பயனாளி கூறுகிறார்:- என் பெயர் நதியா, கணவர் பெயர் சிவராமன். நான் KOSTAK India Pvt Ltd என்ற தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றேன். இருப்பிடத்திலிருந்து அலுவலகத்திற்கு சென்றுவர தினமும் ரூ.50 வரை செலவாகும்.

இதனால் மாதச் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பேருந்து கட்டணத்திற்காக செலவழித்து வந்தேன். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தினார்கள்.

தற்பொழுது பேருந்து பயணத்திற்கான செலவு தொகையை சேமித்து எனது குடும்ப செலவிற்காகவும், குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

என்னைப் போன்ற ஏழை, எளியோர்களின் கஷ்டத்தை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெள்ளம்பி ஊராட்சியைச் சார்ந்த பயனாளி கூறியதாவது:-
என் பெயர் பவானி, கணவர் பெயர் புண்ணியகோட்டி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

நான் கூலி வேலை செய்து வருகின்றேன். நான் தினமும் காலையில் எங்கள் ஊரிலிருந்து கிளம்பி வேலை எங்கு கிடைக்குமோ அந்தந்த ஊர்களுக்கு பேருந்தில் சென்று வருவேன்.

முன்பெல்லாம் எனக்கு பேருந்து கட்டணமாக தினந்தோறும் 60 ரூபாய் வரை செலவாகும். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்தினார்கள்.

தற்பொழுது பேருந்து பயணத்திற்கான செலவு தொகையை சேமித்து எனது குடும்ப செலவிற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். என்னைப் போன்ற ஏழை, எளியோர்களின் கஷ்டத்தை அறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
இராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img