fbpx
Homeபிற செய்திகள்ஓடந்துறை ஊராட்சி பள்ளியை தத்தெடுத்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி

ஓடந்துறை ஊராட்சி பள்ளியை தத்தெடுத்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காளார் கோயில் அமைந்துள்ளது சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி. இப்பள்ளியின் நிர்வாகம் ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்து பள்ளிக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர முடிவெடுத்தது.

அதன்படி மேட்டுப்பாளையம் ஓடந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளியை தத்தெடுக்கும் வகையில் மாவட்ட கல்வி அதிகாரியிடம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி உரிய முறையில் பள்ளியை தத்து எடுப் பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் பள்ளியின் வெள்ளி விழா மற்றும் நிறுவனர் நாள் விழாவில் புரிந்துணர்வு ஒப்பந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சமீரன் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

கோவை ரூட் குழும நிறுவனம்

நிகழ்ச்சியில் கோவை ரூட் குழும நிறுவனங்களின் தலைவரும் பள்ளியின் நிர்வாக அறங்காவலருமான ராமசாமி, பள்ளியின் செயலர் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்தி வேல் மற்றும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தத்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஒரு முன்னுதாரண பள்ளியாக மேம்படுத்தும் வகையில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியின் £ர்பில் அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img