fbpx
Homeபிற செய்திகள்துடியலூரில் ராம்ராஜ் காட்டன் -ஷோரூம்: பொங்கலூர் பழனிசாமி திறந்துவைத்தார்

துடியலூரில் ராம்ராஜ் காட்டன் -ஷோரூம்: பொங்கலூர் பழனிசாமி திறந்துவைத்தார்

தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம், தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது புதுப்பிக்கப்பட்ட க்ஷோரூமை துடியலூர் சரவணா காம்ப்ளக்ஸ் (முருகன் திரையரங்கம் எதிரில்) நேற்று திறந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி மங்கள ஒளி ஏற்றி வைத்தனர்.
கோவை தொழிலதிபர் ஏ.ஏ.சத்தி யானந்தன் முதல் விற்பனையை பெற் றுக்கொண்டார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் மு.சு. நாகராஜன் வரவேற்றார். விழாவில் மேலும் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img