fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியின், மேலாண் மைத்துறை (எம்.பி.ஏ.) சார்பில், “புதுமைகள் மற்றும் அதனால் ஏற் படும் இடையூறுகளால் வர்த்தக களத்தில் ஏற்படும் மாற்றங்கள் & ஐகான் 2023” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் நேற்று (10ம் தேதி) நடைபெற்றது.

இதன் தொடக்கவிழா விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் ஜெ.பாமினி வரவேற்றார். ஷோகோ கார்ப்பரேசன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் குளோபல் தலைவர் ரமீஷ் ஃபைசல், கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

வில்பிரஷ் லேமென் அக்ரோ நிறுவன தலைமை செயல் லேமென் செல்வகுமார் வரதராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, உரை யாற்றினார். அதைத் தொடர்ந்து டிஜிட்டல் மாற்றங்கள், தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின்னணு வர்த்தகம் மற்றும் இணைய சந்தைகள், நிலைத்தன்மை மற்றும் பசுமை புதுமைகள், தரவுகள் பாதுகாப்பு, நுகர்வோர் சான் றிதழ், வினியோகத் தொடர்பில் பின்னடவு ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

அதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு, 165 ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர்.

முடிவில் மேலாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் பிரேம் ஆனந்த் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img